தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மார்ச் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ விற்பனை 20% உயர்வு!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை 20 சதவீதம் உயர்ந்து 4,45,377 வாகனங்களாக இருப்பதாக தெரிவித்தது.

News image

bajaj

Updated On :3 ஏப்ரல் 2026, 3:55 pm

புதுதில்லி: பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கடந்த மார்ச் மாதத்தில் தனது மொத்த விற்பனை 20 சதவீதம் உயர்ந்து 4,45,377 வாகனங்களாக இருப்பதாக தெரிவித்தது. இதுவே கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனையான 3,69,823 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க உயர்வாகும்.

கடந்த மாதம் நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை 2,66,290 வாகனங்களாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில் விற்பனையான 2,21,474 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 20 சதவீதம் அதிகமாகும்.

உள்நாட்டுச் சந்தையில் இருசக்கர வாகன விற்பனை 2,21,021 வாகனங்களாக பதிவானது. இதுவே மார்ச் 2025ல் விற்பனையான 1,83,659 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீத வளர்ச்சியாகும்.

இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி கடந்த மாதத்தில் 1,59,452 வாகனங்களாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு, இதே மாதத்தில் ஏற்றுமதியான 1,32,073 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 21 சதவீதம் அதிகம்.

மார்ச் 2026ல் மொத்த வர்த்தக வாகன விற்பனை 64,904 வாகனங்களாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு, இதே மாதத்தில் விற்பனையான 54,091 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீத வளர்ச்சியாகும்.

இதற்கிடையில், உள்நாட்டுச் சந்தையில் வர்த்தக வாகன விற்பனை 45,269 வாகனங்களாகவும், மார்ச் 2025ல் 37,815 வாகனங்களாகவும், அதேவேளையில், வர்த்தக வாகன ஏற்றுமதி 21 சதவீதம் உயர்ந்து 19,635 வாகனங்களாக பதிவானது. இதுவே மார்ச் 2025ல் 16,276 வாகனங்களாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்தது.

Summary

Bajaj Auto Ltd on Friday reported a 20 per cent rise in total sales at 4,45,377 units in March.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.