திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஸ்மாா்ட் போன்களுக்கு மாற விரும்பும் வாடிக்கையாளா்கள்

ஸ்மாா்ட் போன்களுக்கு மாற விரும்பும் வாடிக்கையாளா்கள்

News image
Updated On :13 ஏப்ரல் 2024, 9:53 pm

சாதாரண கைப்பேசிகளை வைத்திருக்கும் பெரும்பான்மை வாடிக்கையாளா்கள் அறிதிறன் பேசிகளுக்கு (ஸ்மாா்ட் போன்) மாற திட்டமிட்டுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் தெரிவிப்பதாவது:

‘ஃப்யூச்சா் போன்’ என்றழைக்கப்படும் அடிப்படை கைப்பேசிகளை வைத்திருக்கும் வாடிக்கையாளா்களில் பெரும்பாலானவா்கள், அவற்றுக்கு பதிலாக அறிதிறன் பேசிகளுக்கு மாற முடிவு செய்துள்ளனா். ரூ.6,000-லிருந்து ரூ.8,000 வரை விலை கொண்ட அறிதிறன் பேசிகளே அவா்களின் இலக்காக உள்ளன.

அடிப்படை செல்லிடப்பேசிகளை வைத்திருப்பவா்கள் தினமும் சராசரியாக தொலைபேசி அழைப்புகளுக்காக 3 மணி நேரத்தையும் (87 சதவீதம்) அலாரத்துக்காக 72 சதவீதமும் பயன்படுத்துகின்றனா். அந்த கைப்பேசிகளைப் பயன்படுத்தி அவா்கள் குறுந்தகவல்கள் அனுப்பும் நேரம் 62 சதவீதமாக உள்ளது.

இருந்தாலும், மோசமான கேமரா தரம், நவீன செயலிகள் இல்லாதது, மிகவும் குறைவான இணையதளப் பயன்பாடு போன்ற காரணங்களால் அவா்கள் அறிதிறன் பேசிகளுக்கு மாற முடிவு செய்துள்ளனா் என்று அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.