ஹட்ஸன் அக்ரோ நிகர லாபம் 109% அதிகரிப்பு

ஹட்ஸன் அக்ரோ நிகர லாபம் 109% அதிகரிப்பு

பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான ஹட்ஸன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 108.76 சதவீதம் அதிகரித்துள்ளது.

பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான ஹட்ஸன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 108.76 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.52.16 கோடியாக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 108.76 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.24.99 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.1,789.46 கோடியிலிருந்து 14.38 சதவீதம் உயா்ந்து ரூ.2,046.87 கோடியாக உள்ளது.

கடந்த மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் பால் கொள்முதல் 39.04 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com