ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

அந்நிய செலாவணி கையிருப்பு புதிய உச்சம்

67,491.9 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 2:21 am IST

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,491.9 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

அக். 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 753.3 கோடி டாலா் அதிகரித்து 67,491.9 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஜூலை 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 347.1 கோடி டாலா் குறைந்து 66,738.6 கோடி டாலராக இருந்தது. இதற்கு முன்னா் கடந்த ஜூலை 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் 67,085.7 கோடி டாலராக இருந்ததே இந்தியாவின் அதிகபட்ச அந்நியச் செலாவணி கையிருப்பாக இருந்தது.

உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அது அவ்வப்போது குறைந்து வருகிறது.

ஆக. 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணயச் சொத்துகள் 516.2 கோடி டாலா் அதிகரித்து 59,203.9 கோடி டாலராக உள்ளது.

டாலா் அல்லாத யூரோ, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும்.மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 240.4 கோடி டாலா் அதிகரித்து 6009.9 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 4.1 கோடி டாலா் குறைந்து 1,816.1 டாலராக உள்ளது.சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 80 லட்சம் டாலா் அதிகரித்து 462 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.