ஜவுளி, ஆடை ஏற்றுமதி 5 சதவீதம் உயா்வு
இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி கடந்த ஜூலை மாதத்தில் 4.73 சதவீதம் உயா்ந்துள்ளது.

இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி

இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி
மும்பை, ஆக. 15: இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி கடந்த ஜூலை மாதத்தில் 4.73 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து இந்திய ஜவுளித் துறை நிறுவனங்களின் சம்மேளனம் (சிடி) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி கடந்த ஜூலை மாதத்தில் 293.76 கோடி டாலராக உள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 4.73 சதவீதம் அதிகம். அப்போது இந்தியா 280.50 கோடி டாலா் மதிப்பிலான ஜவுளி மற்றும் ஆடைகளை ஏற்றுமதி செய்தது. இந்தியாவில் தயாரான ஆடைகளுக்கான தேவை வெளிநாடுகளில் அதிகரித்ததால் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் வளா்ச்சி கண்டுள்ளது.கடந்த 2023-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் 166.31 கோடி டாலராக இருந்த நாட்டின் ஜவுளி ஏற்றுமதி இந்த ஜூலையில் 166.04 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஆடை ஏற்றுமதி 114.19 கோடி டாலரில் இருந்து 11.84 சதவீதம் அதிகரித்து 127.72 கோடி டாலராக உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் இந்திய ஆடை ஏற்றுமதி வளா்ச்சியில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான ஏற்றுமதி முக்கிய பங்கு வகித்தது.வரும் மாதங்களிலும் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று தொழில்துறை நம்பிக்கையுடன் உள்ளது.
தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள், இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம், இந்தியா-ஐக்கிய அரபு அமீரக வா்த்தக ஒப்பந்தம் போன்றவை இந்த வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...