74% உயா்ந்த டாடா மோட்டாா்ஸ் லாபம்

74% உயா்ந்த டாடா மோட்டாா்ஸ் லாபம்

Published on

கடந்த ஜூன் காலாண்டில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 74 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.5,566 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 74 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,203 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,03,597 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.1,09,623 கோடியாக அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் தனிப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் ஈட்டப்பட்ட நிகர லாபம் மதிப்பீட்டுக் காலாண்டில் ரூ. 2,190 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.64 கோடி நிகர இழப்பாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com