47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குறைந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் பற்றித் தெரிந்துகொள்வோம்.

News image
தங்கம் விலை (கோப்புப்படம்)- din
Updated On :22 ஆகஸ்ட் 2024, 5:36 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகின்றது. அந்தவகையில் கடந்த வாரம் 52 ஆயிரத்திலிருந்த தங்கம் விரை, தொடர்ந்து 6-வது நாளாக 53 ஆயிரத்தில் நீடித்து வருகின்றது.

அதன்படி, இன்று (ஆகஸ் 22) நிலவரப்படி சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,440-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ. 6,680-க்கும் விற்பாளைச் செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 6,710-க்கும், ஒரு சவரன் ரூ, 53,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேசமயம் வெள்ளியின் விலை கடந்த மூன்றாவது நாளாக எந்தவித மாற்றமும் இன்றி ஒரே விலையில் நீட்டித்து வருகின்றது. அதன்படி கிராம் ஒன்றுக்கு ரூ.92-க்கும் ஒரு கிலோ ரூ. 92,000-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.