
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ. 6000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய சந்தைகளில் தங்கள் வணிகத்தை வலுவாக்குவதையும், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஒன்பிளஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
'புராஜெக்ட் ஸ்ட்ரெயிட்லைட்' என்ற பெயரில் இந்தியாவில் ரூ. 6000 கோடியை ஒன்பிளஸ் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த 2013ஆம் ஆண்டு கார்ல் பெய், பீடே லெள ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தைகளின் முன்னணி இடங்களைப் பிடித்துள்ளன. இந்நிலையில், இந்திய சந்தைகளில் வணிகத்தை மேலும் வலுப்படுத்தவும், தங்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்படுத்தவும் புதிய திட்டத்தை ஒன்பிளஸ் நிறுவனம் எடுத்துள்ளது.
புராஜெக்ட் ஸ்ட்ரெயிட்லைட் என்ற பெயரில் இந்தியாவில் ரூ. 6000 கோடியை ஒன்பிளஸ் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.
இது தொடர்பாக ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் மூன்று விஷயங்களை சரிசெய்வதை நோக்கமாகக்கொண்டு இந்த முதலீடு செய்யப்படுகிறது. பொருள்களின் உறுதித்தன்மை, வாடிக்கையாளர் சேவை மேம்பாடு, இந்திய சந்தைகளுக்கு ஏற்ப அம்சங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை இந்த முதலீடு வலுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்குள் தங்கள் சேவை மையங்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க ஒன்பிளஸ் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதில் 22% எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும், வாட்ஸ்ஆப், லைவ் சேட், ஹாட்லைன் ஆகிய இணைய வாயிலான சேவை மையங்களையும் ஒன்பிளஸ் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கடும் சரிவிலிருந்து 3 காசுகள் உயர்ந்த ரூபாய் மதிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.