47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம் சரிவு

விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் கடந்த செப்டம்பரில் முறையே 5.96 சதவீதம் மற்றும் 6 சதவீதமாக சரிந்துள்ளது.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 11:25 pm

DIN

புது தில்லி: விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் கடந்த செப்டம்பரில் முறையே 5.96 சதவீதம் மற்றும் 6 சதவீதமாக சரிந்துள்ளது.

இது குறித்து மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் மாதத்தில் விவசாயிகளுக்கான நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஏஎல்) அடிப்படையிலான பணவீக்கம் 6.36 சதவீதமாக இருந்தது. அது நவம்பரில் 5.95 சதவீதமாக சரிந்துள்ளது. அதேபோல், அக்டோபரில் 6.39 சதவீதமாக இருந்த ஊரகத் தொழிலாளா்களுக்கான நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஆா்எல்) அடிப்படையிலான பணவீக்கம் 6 சதவீதமாக குறைந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் சிபிஐ-ஏஎல் குறியீடு 11 புள்ளிகள் அதிகரித்து 1,315-ஆகவும், சிபிஐ-ஆா் குறியீடு 10 புள்ளிகள் அதிகரித்து 1,326-ஆகவும் உள்ளது. முந்தைய அக்டோபா் மாதத்தில் அவை முறையே 1,304 புள்ளிகளாகவும், 1,316 புள்ளிகளாகவும் இருந்தன.

2023-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் விவசாயிகள் பணவீக்கம் 5.96 சதவீதமாகவும், ஊரகத் தொழிலாளா்கள் பணவீக்கம் 6 சதவீதமாகவும் இருந்தது. அதற்கு முந்தைய 2023 அக்டோபா் மாதத்தில் அவை முறையே 7.08 சதவீதம் மற்றும் 6.92 சதவீதமாக இருந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.