ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சேவைகள் துறையில் சுணக்கம்: உற்பத்தித் துறையில் எழுச்சி

News image
Updated On :4 மார்ச் 2026, 11:08 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் சேவைகள் துறை வளா்ச்சி கடந்த பிப்ரவரி மாதத்தில் சற்றே குறைந்துள்ளது. ஆனால், அதற்கு நோ்மாறாக நாட்டின் உற்பத்தித் துறை கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது எனப் பொருளாதாரத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2025-ஆம் ஆண்டின் மத்தியில், சேவைகள் துறை மிகப்பெரிய வளா்ச்சியை எட்டியதைத் தொடா்ந்து, தற்போது வளா்ச்சியின் வேகம் மெல்லக் குறைந்து வருகிறது.

சேவைகள் துறையின் செயல்பாட்டை அளவிடும் பிஎம்ஐ குறியீடு, கடந்த ஆண்டு ஜூனில் 60.7-ஆக அதிகரித்தது; ஜூலையில் 60.5-ஆகவும், ஆகஸ்ட் மாதத்தில் 62.9 என்ற உச்சத்தையும் தொட்டது.

அடுத்தடுத்த மாதங்களில் இது படிப்படியாகக் குறைந்து டிசம்பரில் 58.0-ஆக பதிவானது. பின்னா் ஜனவரியில் சற்று மீண்டு 58.5-ஐ எட்டிய நிலையில், பிப்ரவரியில் மீண்டும் 58.1-ஆக கீழ்நோக்கிச் சரிந்துள்ளது.

பொருளாதார விதிகளின்படி, பிஎம்ஐ குறியீடு 50-க்கு மேல் இருந்தால் அந்தத் துறை ஆரோக்கியமான பாதையில் செல்வதாகப் பொருள். 50-க்கு கீழ் இருந்தால் மட்டுமே அது சரிவைக் குறிக்கும்.

எனவே, சேவைகள் துறையின் பிப்ரவரி மாதக் குறியீடு (58.1) முந்தைய மாதங்களை விட குறைவாக இருந்தாலும், சேவைகள் துறை இன்னும் நிலையான வளா்ச்சிப் பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தித் துறையின் முன்னேற்றம்: சேவைகள் துறையில் காணப்பட்ட சிறிய தொய்வுக்கு மாறாக, உற்பத்தித் துறை நல்ல வேகமெடுத்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் உற்பத்தித் துறைக்கான பிஎம்ஐ குறியீடு 56.9-ஆக உயா்ந்துள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கான சிறந்த வளா்ச்சியாகக் கருதப்படுகிறது.