நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

புணே: நவம்பர் மாதத்தில் சொத்துகளின் பதிவு 11% வீழ்ச்சி!

புணேவில் சொத்துகளின் பதிவு விகிதம் கடந்த நவம்பரில், 11% குறைந்து, 13 ஆயிரத்து 371 ஆக உள்ளது என்று நைட் பிராங்க் இந்தியா தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :14 டிசம்பர் 2024, 6:49 pm IST

புதுதில்லி: புணேவில் சொத்துகளின் பதிவு விகிதம் கடந்த நவம்பரில், 11% குறைந்து, 13 ஆயிரத்து 371 ஆக உள்ளது என்று நைட் பிராங்க் இந்தியா தெரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட் ஆலோசகரான நைட் ஃபிராங்க் இந்தியா இன்று வெளியிட்ட அறிக்கையில், புனேவில் 2024 நவம்பரில் 13,371 சொத்துகள் பதிவாகி மாநில கருவூலத்திற்கு ரூ.475 கோடி வருவாய் ஈட்டியது. அதே வேளையில் கடந்த ஆண்டு நவம்பரில் 14,988 சொத்துகள் பதிவானதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு அக்டோபரில் 20,894 சொத்துக்களுடன் ஒப்பிடும்போது, நவம்பரில் சொத்துகளின் பதிவு 36% குறைந்துள்ளது.

நைட் ஃபிராங்க் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஷிஷிர் பைஜால் கூறுகையில், புனேவின் ரியல் எஸ்டேட் சந்தை தொடர்ந்து நிலையான பதிவுகளை வெளிப்படுத்தி வருகிறது என்றார்.

பொதுமக்களிடையே வளர்ந்து வரும் விருப்பங்கள் மற்றும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப, புனேவின் ரியல் எஸ்டேட் சந்தை தொடர்ந்து நிலையான பதிவுகளை எதிர்கொண்டு வருகிறது என்றார் நைட் ஃபிராங்க் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஷிஷிர் பைஜால்.

இந்த தரவுகள் குறித்து கருத்து தெரிவித்த புனேவைச் சேர்ந்த கெரா டெவலப்மென்ட்ஸ் நிர்வாக இயக்குநரான ரோஹித் கெரா, நவம்பர் மாதத்தில் நடைபெற்ற பதிவுகள், பொதுவாக செப்டம்பர் மாதத்தில் செய்யப்பட்ட விற்பனையே. தற்போது, அதிகரித்து வரும் வீடுகளின் விலையும் மற்றும் அளவு அகியவற்றால், விற்பனையில் ஒரு சிறிய மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இந்த போக்கு சில மாதங்களில் சரியாகி விடும் என்றார்.

இன்ஃப்ராமந்த்ரா இயக்குநரும் இணை நிறுவனருமான கார்வித் திவாரி கூறுகையில், நவம்பரில் புனேவில் சொத்து பதிவு வீழ்ச்சியானது சந்தையில் எந்தவொரு பலவீனத்தின் அறிகுறி அல்ல. அதே வேளையில், கடந்த ஆண்டு, இந்தியாவில் பெரும்பாம்மையான நகரங்களில் சொத்துகள் வரலாறு காணாத அளவு விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.