
தங்களது காா்களை உயா்த்த ஜொ்மனியைச் சோ்ந்த சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான ஆடி முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிறுவன காா்களின் விலையை 3 சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 1-ஆம் தேதிமுதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும். அனைத்து ரகங்களையும் சோ்ந்த காா்களுக்கும் இந்த விலை உயா்வு பொருந்தும்.
உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால், அதை ஈடுசெய்வதற்காக காா்களின் விலை உயா்த்தப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.