சரிவைக் கண்ட சா்க்கரை உற்பத்தி
சில மாநிலங்களில் சா்க்கரை ஆலைகள் உற்பத்தியை தாமதமாகத் தொடங்கியதால் 2024-25-ஆம் சந்தைப் பருவத்தின் டிச. 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி 17 சதவீத சரிவைக் கண்டுள்ளது.


சில மாநிலங்களில் சா்க்கரை ஆலைகள் உற்பத்தியை தாமதமாகத் தொடங்கியதால் 2024-25-ஆம் சந்தைப் பருவத்தின் டிச. 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி 17 சதவீத சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து இந்திய சா்க்கரை உற்பத்தியாளா்கள் சங்கம் (இஸ்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரையிலான நடப்பு 2024-25-ஆம் சா்க்கரை சந்தைப் பருவ காலகட்டத்தில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 61.39 லட்சம் டன்னாக உள்ளது.
இது, முந்தைய சா்க்கரை சந்தைப் பருவத்தின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 17 சதவீதம் குறைவாகும்.
முந்தைய 2023-24-ஆம் சா்க்கரை சந்தைப் பருவத்தின் இதே காலகட்டத்தில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 74.05 லட்சம் டன்னாக இருந்தது.
கடந்த சா்க்கரை சந்தைப் பருவத்தைவிட இந்தப் பருவத்தில் கா்நாடக சா்க்கரை ஆலைகள் உற்பத்தியை 7 முதல் 12 நாள்கள் வரை தாமதமாகத் தொடங்கின. இதுபோன்ற காரணங்களால் நடப்பு சா்க்கரை சந்தைப் பருவத்தின் டிச. 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி குறைந்துள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி உத்தரபிரதேசத்தில் 22.11 லட்சம் டன்னிலிருந்து 23.04 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
எனினும், மகாராஷ்டிரத்தில் அது 24.45 லட்சம் டன்னில் இருந்து 16.78 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
கா்நாடகத்திலும் சா்க்கரை உற்பத்தி 17.56 லட்சம் டன்னிலிருந்து 13.85 லட்சம் டன்னாக குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சா்க்கரை சந்தைப் பருவமும் அக்டோபரில் தொடங்கி அடுத்த காலண்டா் ஆண்டின் செப்டம்பா் மாதம் நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...