மும்பை: உலகளாவிய பலவீனமான குறியீடுகள் மற்றும் எஃப்ஐஐ ஆகியோர் இன்று எதிர்மறையாக இருந்ததால், அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது.
இன்றைய வர்த்த சந்தையில், சென்செக்ஸ் 451 புள்ளிகள் சரிந்து 78,248.13 புள்ளிகளாகவும், நிஃப்டி 169 புள்ளிகள் சரிந்து 23,644.90 புள்ளிகளாக முடிவடைந்தது.
நிஃப்டி-யில் பார்மா குறியீடு 0.53 சதவிகிதம் உயர்ந்ததும் மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து வர்த்தகமானது. அதே வேளையில், ஆட்டோ குறியீடு 0.93 சதவிகிதமும், வங்கி குறியீடு 0.86 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.
அதானி எண்டர்பிரைசஸ் அதிகபட்சமாக 7.57 சதவிகிதம் உயர்ந்து ரூ.2,592.35 ஆக முடிந்தது. ஸ்ரீராம் பைனான்ஸ் 0.83 சதவிகிதமும், ஹெச்சிஎல் டெக் 0.71 சதவிகிதமும் உயர்ந்தது. ஹிண்டால்கோ 2.59 சதவிகிதமும், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவன பங்குகள் தலா 1.3 முதல் 1.7 சதவிகிதமும் சரிந்தது.
இதையும் படிக்க: 25 ஆண்டு நிறைவு செய்த ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை!
டாப் 30 ப்ளூ சிப் பங்குகளில் இன்று இன்போசிஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டைட்டன், பவர் கிரிட், டெக் மஹிந்திரா, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை மிகப்பெரிய அளவில் சரிந்ததும் சோமேட்டோ, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகியவை உயர்ந்தும் வர்த்தகமானது.
ஆசிய சந்தைகளில் டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்தும், சியோல் உயர்ந்தும் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் (வெள்ளிக்கிழமை) சரிந்து முடிந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.07 சதவிகிதம் உயர்ந்து 74.22 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.