கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பங்குச்சந்தை வீழ்ச்சி! 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வு!

வாரத்தின் முதல் நாளான இன்று (பிப். 5) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிந்து காணப்பட்டன. 

கோப்புப் படம்

Published On :

வாரத்தின் முதல் நாளான இன்று (பிப். 5) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிந்து காணப்பட்டன. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 354.21 புள்ளிகள் சரிந்து 71,731.42 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது 0.49 சதவிகிதம் சரிவாகும். 

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82.10 புள்ளிகள் சரிந்து 21,771.70 புள்ளிகளாக வணிகம் நிறைவடைந்தது. இது 0.38 சதவிகிதம் சரிவாகும்.

பங்குச்சந்தை குறியீட்டிலுள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன. அதில் அதிகபட்சமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் 5.46 சதவிகிதம் உயர்வுடன் காணப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சன் பார்மா 3.29 சதவிகிதமும், எம் & எம் 2.33 சதவிகிதமும், பவர் கிரிட் 2.18 சதவிகிதமும் டாடா ஸ்டீல் பங்குகள் 2.01 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

இதேபோன்று பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக சரிவை சந்தித்தது. 3.53 சதவிகிதம் வரை சரிந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.