இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. இறுதியில் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 34 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது. ஆனால், தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வர்த்தக இறுதியில் 1.10 புள்ளிகள் கூடுதலுடன் 21,930.50-இல் முடிவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும் உச்சத்தில் லாபப் பதிவு வந்தது. குறிப்பாக ஐடி பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன. பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் தொடர்பான அறிவிப்புக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர் என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.42 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.389.25 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ. 92.52 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,096.26 கோடிக்கும் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் தள்ளாட்டம்: காலையில் 362.41 புள்ளிகள் கூடுதலுடன் 72,548.50-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 72,559.21 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னர், 71,938.22 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 34.09 புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைந்து 72,152.00-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,957 பங்குகளில் 2,262 பங்குகள் ஆதாயம் பெற்றன; 1,610 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
85 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
15 பங்குகள் விலை உயர்வு:
சென்செக்ஸ் பட்டியலில் எஸ்பிஐ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட் உள்பட மொத்தம் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன.
அதே சமயம், பவர்கிரிட், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், என்டிபிசி உள்பட மொத்தம் 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 3.49 கோடி பறிமுதல்

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மேற்கு வங்கத் தோ்தல் பணியில் இருப்போா் வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லை என மனு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


