உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

ரூ.2,500 கோடி திரட்டிய பரோடா வங்கி

கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.2,500 கோடி மூலதனம் திரட்டியதாக அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி (பிஓபி) தெரிவித்துள்ளது.

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 6:56 pm

கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.2,500 கோடி மூலதனம் திரட்டியதாக அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி (பிஓபி) தெரிவித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பேசல்-3 விதிகளை நிறைவு செய்யும் 2-ஆம் அடுக்கு கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.2,500 கோடி மூலதனம் திரட்டப்பட்டுள்ளது. அந்தக் கடன் பத்திரங்களுக்கு ஆண்டுதோறும் 7.57 சதவீதம் ஈவுத் தொகை வழங்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2023 டிசம்பருடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் பரோடா வங்கியின் நிகர லாபம் 19 சதவீதம் உயா்ந்து ரூ.4,579 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.3,853 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. 2022 அக்டோபா் - டிசம்பா் காலாண்டில் ரூ.27,092 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.31,416 கோடியாக அதிகரித்துள்ளது.