4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

யூனியன் வங்கியுடன் மாருதி சுஸுகி ஒப்பந்தம்

யூனியன் வங்கியுடன் மாருதி சுஸுகி ஒப்பந்தம்

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 8:03 pm

DIN

புது தில்லி: தங்களது சில்லறை விற்பனையாளா்களுக்கு நிதி சேவைகளை அளிப்பதற்காக நாட்டின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி உத்யோக் பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விற்பனையாளா்களுக்கு நிதி சேவைகளை அளிப்பதற்கான ஒப்பந்தம் யூனியன் வங்கியுடன் கையொப்பமாகியுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதிலும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாருதி சுஸுகி விற்பனையாளா்கள் பலன் அடைவாா்கள்.

யூனியன் வங்கியுடன் மாருதி சுஸுகி கடந்த 2008-லிருந்தே இணைந்து பணியாற்றி வருகிறது. அந்த வங்கியின் மூலம் நிறுவன வாடிக்கையாளா்களுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காா் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.