சென்செக்ஸ் 1,053 புள்ளிகள் வீழ்ச்சி: நஷ்டம் ரூ.8.36 லட்சம் கோடி

ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை தொடங்கிய பங்குச்சந்தை காலையில் உற்சாகத்துடன் தொடங்கினாலும், இறுதியில் எதிர்மறையாக முடிந்தது. 
சென்செக்ஸ் 1,053 புள்ளிகள் வீழ்ச்சி: நஷ்டம் ரூ.8.36 லட்சம் கோடி
Updated on
1 min read

ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை தொடங்கிய பங்குச்சந்தை காலையில் உற்சாகத்துடன் தொடங்கினாலும், இறுதியில் எதிர்மறையாக முடிந்தது. 
இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,053 புள்ளிகளை இழந்தது. இதனால், சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.8.36 லட்சம் கோடி குறைந்தது. 
உள்நாட்டுச் சந்தை காலையில் உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது.  ஆனால், பிற்பகல் வர்த்தகத்தின் போது, ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட முன்னணிப் பங்குகளில்  லாபப் பதிவு அதிகரித்தது.  இதையடுத்து, சந்தை "கரடி'யின் பிடியில் வந்தது. குறிப்பாக, மீடியா பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன. மேலும், ஃபார்மா, ஹெல்த்கேர் குறியீடுகள் தவிர வங்கி, ஆட்டோ, நிதி நிறுவனங்கள், ரியால்ட்டி உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் 2 முதல் 5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு கடும் சரிவு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.8.36 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.366.05 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை ரூ.545.58  கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.719.31 கோடிக்கும் பங்குகளை விற்றுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
உச்சத்தில் லாபப் பதிவு: காலையில் 444.55 புள்ளிகள் கூடுதலுடன் 71,868.20}இல் தொடங்கிய அதிகபட்சமாக 72,039.20 வரே மேலே சென்றது. பின்னர்,  முன்னணி நிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு வந்ததால், 70,234.55 வரை கீழே  சென்ற சென்செக்ஸ்,  இறுதியில் 1,053.10 புள்ளிகளை (1.47 சதவீதம்) இழந்து  70,370.55}இல்  நிறைவடைந்தது.  மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 4,067 பங்குகளில் 938 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. 2,991 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 138 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
24 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் சன்ஃபார்மா, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், பவர்கிரிட், பஜாஜ் ஃபின்சர்வ், டிசிஎஸ் ஆகிய 6 பங்குகள் மட்டுமே  ஆதாயப் பட்டியலில் இருந்தன.  அதே சமயம், மொத்தம் 24  பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில் இண்டஸ்இண்ட் வங்கி, எஸ்பிஐ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை 3 முதல் 5 சதவீதம் வரை சரிவைக் கண்டன. 
நிஃப்டி 333 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 144.90 புள்ளிகள் கூடுதலுடன்  21,716.70}இல் தொடங்கி அதிகபட்சமாக  21,750.25 வரை மேலே  சென்றது. பின்னர்,  21,192.60 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 333 புள்ளிகளை (1.54 சதவீதம்)  இழந்து 21,238.80}இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 10 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 40 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com