வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பஜாஜ் வாகன விற்பனை 5% உயா்வு

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை 5 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image

பஜாஜ்

Updated On :1 ஜூலை 2024, 9:36 pm

Din

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை 5 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,58,477-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 5 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,40,981-ஆக இருந்தது.

கடந்த 2023 ஜூன் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை (வா்த்தக வாகனங்களையும் சோ்த்து) 1,99,983-ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை 2024 ஜூன் மாதத்தில் 8 சதவீதம் அதிகரித்து 2,16,451-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 1,40,998-லிருந்து 1 சதவீதம் உயா்ந்து 1,42,026-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.