நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அசோக் லேலண்ட் விற்பனை 14,940-ஆக சரிவு

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 14,940-ஆக சரிந்துள்ளது.

News image

அசோக் லேலண்ட்

Updated On :2 ஜூலை 2024, 9:17 pm

Din

புது தில்லி: ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 14,940-ஆக சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 14,940-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் 15,221 வாகனங்களை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

2023 ஜூன் மாதத்தில் 14,363-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 1 சதவீதம் குறைந்து 14,261-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டு சந்தையில் நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 2 சதவீதம் குறைந்து 9,052-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை ஓா் ஆண்டுக்கு முன்னா் 9274-ஆக இருந்தது. இலகுரக வா்த்தக வாகனங்கள் விற்பனை 5,089-லிருந்து 2 சதவீதம் அதிகரித்து 5,209-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.