புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

புதிய உச்சத்தில் சென்செக்ஸ்! உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை!

நேற்று சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை வணிகம் இன்று உச்சத்தை எட்டியதோடு உயர்வுடனும் முடிந்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :9 ஜூலை 2024, 10:48 am

DIN

வணிகத்தின் 2வது நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.

நேற்று சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை வணிகம் இன்று உச்சத்தை எட்டியதோடு உயர்வுடனும் முடிந்துள்ளது.

நேற்றைய வணிகத்தில் அதிகபட்சமாக 80,067.46 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இன்று 80,397.17 என்ற புதிய உச்சத்தை பதிவு செய்து, பின்னர் சற்று சரிந்து 80,351.64 புள்ளிகளுடன் நிறைவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 391.26 புள்ளிகள் உயர்ந்து, 80,351.64 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது 0.49 சதவீதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 112.65 புள்ளிகள் உயர்ந்து, 24,433.20 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.46 சதவீதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் முடிந்தது. எஞ்சிய 11 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிந்தன.

அதிகபட்சமாக மாருது சுசூகி, அல்ட்ராடெக் சிமென்ட், எம்&எம், டைட்டன் கம்பெனி, எல்&டி, நெஸ்ட்லே இந்தியா, சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் முடிந்தன.

இதேபோன்று ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், கோட்டாக் வங்கி, இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், இந்தஸ்இந்த், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடன் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.