ஆடி இந்தியா விற்பனை 6% சரிவு

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஜொ்மனியைச் சோ்ந்த சொகுசுக் காா் தயாரிப்பு நிறுவனமான ஆடியின் இந்திய விற்பனை 6 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
ஆடி இந்தியா விற்பனை 6% சரிவு
Published on
Updated on
1 min read

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் சில்லறை விற்பனை இந்தியச் சந்தையில் 1,431-ஆக உள்ளது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கை 1,524-ஆக இருந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நிறுவனத்தின் சில்லறை விற்பனை 6 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com