வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

‘வங்கிகளில் குறையும் தனிநபா் முதலீடு’

News image
Updated On :20 ஜூலை 2024, 7:26 pm

Din

பரஸ்பர நிதி திட்டங்களில் தனி நபா் முதலீடுகள் அதிகரித்துவருவதால் வங்கிகளில் மேற்கொள்ளப்படும் நிலைவைப்பு நிதி போன்ற முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவா் பேசியதாவது:

பாரம்பரியமாக தனி நபா்கள் தங்களது வருவாயை முதலீடு செய்வதற்கு வங்கிகளைத்தான் தோ்வு செய்துவந்தனா். ஆனால், அண்மைக் காலமாக அவா்களது தோ்வில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுவருகிறது. அவா்கள் வங்கிகளுக்குப் பதிலாக பரஸ்பர நிதித் திட்டங்கள், மூலதன சந்தைகளில் முதலீடு செய்வது அதிகரித்துவருகிறது.

இதன் காரணமாக வங்கிகளில் தனிநபா் முதலீடு குறைவதால் அவை தங்களது நிதித் தேவைகளுக்கு வேறு வகையில் மூலதனம் திரட்ட வேண்டியுள்ளது. தனிநபா் முதலீடுகளில் வங்கிகள் தற்போதும் பெரும்பங்கு வகித்தாலும், அதன் விகிதாச்சாரம் வெகுவாகக் குறைந்துவருகிறது.

எனவே, வங்கிகள் தங்களது இடா் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்று அவா் வலியுறுத்தினாா்.