தொடர்ந்து 5வது நாளாக பங்குச் சந்தை சரிவுடன் முடிவு!

பட்ஜெட்டைத் தொடர்ந்து பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து சரிந்து முடிந்தது.
மும்பை பங்குச் சந்தை | கோப்புப் படம்
மும்பை பங்குச் சந்தை | கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மும்பை: பட்ஜெட்டைத் தொடர்ந்து பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று (வியாழக்கிழமை) பின்னடைவை சந்தித்தது. முதலீட்டாளர்கள் தொடர்ந்து உலோகம், வங்கி மற்றும் நிதி பங்குகளை விற்றுள்ளனர்.

பத்திர பரிவர்த்தனை வரி மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரி உயர்வுக்குப் பிறகு, வெளிநாட்டு நிதி அதிகளவில் வெளியேறியதாலும் இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது.

இன்றைய வர்த்தகத்தில் வீழ்ச்சிக்கு பிறகும், டாடா மோட்டார்ஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகிய பங்குகளின் ஆதிக்கத்தால் சென்செக்ஸ் மீண்டது. 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 109.08 புள்ளிகள் சரிந்து 80,039.80 ஆகவும், வர்த்தக நேரத்தில் 0.83 சதவிகிதம் சரிந்து 79,477.83 புள்ளிகளாக வர்த்தகமானது.

மும்பை பங்குச் சந்தை | கோப்புப் படம்
கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம்: உச்சநீதிமன்றம்

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 7.40 புள்ளிகள் குறைந்து 24,406.10 புள்ளிகளாக உள்ளது. வர்த்தக முடிவில் 202.7 புள்ளிகள் சரிந்து 24,210.80 புள்ளிகளாக இருந்தது.

ஆக்சிஸ் வங்கியின் ஜூன் காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதால் பங்கின் விலை 5 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது.

துறை வாரியாக ஆட்டோமொபைல், கேப்பிட்டல் குட்ஸ், பவர், ஆயில் & கேஸ், ஹெல்த்கேர், மீடியா துறை பங்குகள் 0.5 முதல் 3 சதவிகிதமும், வங்கி, ஐடி, மெட்டல், ரியாலிட்டி மற்றும் டெலிகாம் துறை பங்குகள் 0.5 முதல் 1 சதவிகிதமும் சரிந்தன.

நெஸ்லே, டைட்டன், ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் வங்கி, ஐடிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது. லார்சன் & டூப்ரோ, சன் பார்மா, கோடக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பவர் கிரிட் ஆகிய பங்குகள் உயர்நது முடிந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் சுமார் 6 சதவிகிதம் உயர்ந்தது.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் (புதன்கிழமையன்று) சரிந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (புதன்கிழமையன்று) ரூ.5,130.90 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.73 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 80.31 டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com