சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தங்கம் விலை மீண்டும் ரூ.54,000-ஐ தாண்டியது!

இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ. 600 அதிகரிப்பு.

News image
Updated On :6 ஜூன் 2024, 5:09 am

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 600 அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக ஒரு சவரன் தங்கம் ரூ. 54 ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனையாகி வந்தது. நேற்று ஒரு சவரன் ரூ. 53,800-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஒரு சவரன் தங்கம் ரூ. 600 அதிகரித்து ரூ. 54,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 75 அதிகரித்து ரூ. 6,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை கடந்த வாரம் ஒரு கிராம் ரூ. 100-ஐ கடந்து புதிய உச்சம் அடைந்தது. இந்த வாரம் தொடக்கத்தில் மீண்டும் வெள்ளியின் விலை சற்று குறைந்தது.

இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.1.80 அதிகரித்து ரூ. 98-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.98,000-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.