
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்க உள்ளதால், இந்திய பங்கு குறியீடுகள் தொடர்ந்து மூன்றாவது அமர்விலிருந்து லாபத்தை நோக்கி பயணித்தது.
நிஃப்டி டாப் 50 வாராந்திர டெரிவேட்டிவ்ஸ் காலாவதியாகிவிட்டதாக சந்தை வல்லுனர்கள் தெரிவித்ததையடுத்து நாள் முழுவதும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியானது உயர்ந்தும், சரிந்தும் முடிவடைந்தது.
சென்செக்ஸ் 692 புள்ளிகள் அதிகரித்து 75,074 புள்ளிகளாகவும், நிஃப்டி 201 புள்ளிகள் அதிகரித்து 22,821 புள்ளிகளாகவும் வர்த்தகமானது. இன்றைய வர்த்தகத்தில் சுமார் 2,700 பங்குகள் ஏற்றத்திலும், 703 பங்குகள் இறக்கத்திலும், 68 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஐடி, நிதி சேவைகள் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் இன்று நிஃப்டியில் உயர்த்து முடிந்தது.
எஃப்.எம்.சி.ஜி மற்றும் பார்மா ஆகிய தற்காப்பு துறைகள் பின்தங்கிய நிலையில் இருந்தன. நிஃப்டி எனர்ஜி, பேங்க் மற்றும் ஐடி சேவை துறைகள் 1 முதல் 3 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது. அதே வேளையில் கேபிடல் குட்ஸ், ரியாலிட்டி மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை இன்றைய வர்த்தகத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக ஏற்ற இறக்கத்திற்குப் பிறகு சந்தை இயல்பு நிலைக்குத் திரும்புவதாலும், பெடரல் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளை முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதும், மக்களவைத் தோ்தலுக்கு பிறகு, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளிட்ட உலகளாவிய போக்குகளிலிருந்து தரவுகளை வல்லுனர்கள் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக ஜியோஜித் நிதி சேவைகளின் தலைமை நிபுணர் வி.கே.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
ஜூன் 5ம் தேதி வெளியிடப்பட்ட மே மாத ஊதியப்பட்டியல் அறிக்கையில், தொழிலாளர் சந்தை தளர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இது அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பை இந்த ஆண்டு வட்டி விகிதங்களைக் குறைக்கத் தூண்டக்கூடும்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.38 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 78.71 டாலராக உயர்ந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்று ரூ.5,656.26 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.