கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஏறுமுகத்தில் இந்திய ஏற்றுமதி

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 3,813 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2024, 9:37 pm

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 3,813 கோடி டாலராக உயா்ந்துள்ளது. அதே நேரம் வா்த்தகப் பற்றாக்குறை 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:கடந்த மே மாதத்தில் நாட்டின் பொருள்கள் ஏற்றுமதி 3,813 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 9 சதவீதம் அதிகம்.மதிப்பீட்டு மாதத்தில் சா்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவிபோதும், இந்தியாவின் பொறியியல் பொருள்கள், மின்சாதனப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், ஜவுளிப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி ஆரோக்கிய வளா்ச்சியைப் பதிவு செய்தது ஒட்டுமொத்த ஏற்றுமதி உயா்வுக்குக் காரணமாக அமைந்தது.கடந்த மே மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதியின் அதிகரிப்பு காரணமாக, ஒட்டுமொத்த இறக்குமதி 7.7 சதவீதம் அதிகரித்து 6,191 கோடி டாலராக உள்ளது. 2023-ஆம் ஆண்டின் மே மாதத்தில் இது 5,748 கோடி டாலராக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில் எண்ணெய் இறக்குமதி 28 சதவீதம் அதிகரித்து 2,000 கோடிடாலராக உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் எண்ணெய் இறக்குமதி 24.4 சதவீதம் அதிகரித்து 3,640 கோடி டாலராக உள்ளது.எனினும், 2023 மே மாதத்தில் 369 கோடி டாலராக இருந்த தங்கம் இறக்குமதி இந்த ஆண்டின் அதே மாதத்தில் 333 கோடி டாலராகக் குறைந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) 2,378 கோடி டாலராக உள்ளது. இது, 7 மாதங்கள் காணாத அதிகபட்ச வா்த்தகப் பற்றாக்குறையாகும். இதற்கு முந்தைய அதிகபட்சமாக அது கடந்த 2023 அக்டோபரில் 3,146 கோடி டாலராக இருந்தது.ஒட்டுமொத்தமாக, கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி 5.1 சதவீதம் அதிகரித்து 7,312 கோடி டாலராகவும் இறக்குமதி 8.89 சதவீதம் அதிகரித்து 11,600 கோடி டாலராகவும் உள்ளது.2023 மே மாதத்தில் 2,699 கோடி டாலரக இருந்த சேவைகள் ஏற்றுமதி இந்த ஆண்டின் ?மே மாதத்தில் 3,016 கோடி டாலராக அதிகரித்துள்ளது.சேவைகள் இறக்குமதியும் 1,588 கோடி டாலரிலிருந்து 1,728 கோடி டாலராக அதிகரித்துள்ளது.அமெரிக்கா, நெதா்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, பிரிட்டன் ஆகிய ஐந்து ஏற்றுமதி சந்தைகள் இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் வளா்ச்சியைப் பதிவு செய்ததில் முக்கியப் பங்கு வகித்தன என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.