
மும்பை: எண்ணெய் மற்றும் எரிவாயு, மூலதன பொருட்கள் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளின் வெளிப்பாட்டை முதலீட்டாளர்கள் குறைத்ததால், பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது.
ஆறு நாள் பேரணியை தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை டாப் 30-பங்கு வரிசையில் சென்செக்ஸ் 269.03 புள்ளிகள் சரிந்து 77,209.90 புள்ளிகளில் நிலைபெற்றது. பகலில் இது 676.93 புள்ளிகள் குறைந்து 76,802 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 100.1 புள்ளிகள் உயர்ந்து 23,667.10 புள்ளிகளைத் தொட்ட நிலையில், சந்தையின் வேகத்தைத் தக்க வைக்கத் தவறியதால் 65.90 புள்ளிகள் சரிந்து 23,501.10 ஆக முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் அல்ட்ராடெக் சிமெண்ட், லார்சன் & டூப்ரோ, டாடா மோட்டார்ஸ், நெஸ்லே, டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் சரிந்து வர்த்தகமானது. இதற்கு நேர்மாறாக பார்தி ஏர்டெல், இன்போசிஸ், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ மற்றும் என்.டி.பி.சி. பங்குகள் ஏற்றத்தில் முடிவடைந்தது.
ஐரோப்பிய சந்தைகள் சரிந்ததும், ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நோற்று (வியாழக்கிழமை) எற்ற - இறக்கத்தில் முடிவடைந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.415.30 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி உள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.16 சதவிகிதம் குறைந்து 85.57 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.