மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வணிக நடவடிக்கைகளை 2025 ஏப்ரல் வரை ஒத்திவைத்த நொய்டா விமான நிலையம்!

நொய்டா விமான நிலையம், தனது வணிக விமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 2024க்கு பதிலாக ஏப்ரல் 2025 இறுதிக்கு ஒத்திவைத்ததுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :24 ஜூன் 2024, 4:25 pm

DIN

புதுதில்லி: நொய்டா விமான நிலையம், தனது வணிக விமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 2024க்கு பதிலாக ஏப்ரல் 2025 இறுதிக்கு ஒத்திவைத்ததுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் மேம்பட்ட நிலையில் இருப்பதாக விமான நிலையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானம் ஒரு பெரிய திட்டமாகும். அதன் ஓடுபாதை, பயணிகள் முனையம், கட்டுப்பாட்டு கோபுரம் உள்ளிட்ட கட்டுமான நடவடிக்கை அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தை கையாளுதல், வணிகப் பகுதிகளின் செயல்பாடு மற்றும் முக்கியமான பராமரிப்பு ஒப்பந்தங்களுக்கான சலுகைகள் சமீபத்தில் வழங்கப்பட்ட நிலையில், நொய்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான இணைப்புக்காக பல விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.

தில்லியில் அமையவிருக்கும் இரண்டாவது விமான நிலையத்தை நிறுவ டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், அதன் தற்போதைய கட்டுமான நிலையைக் கருத்தில் கொண்டு, 2025 ஏப்ரல் இறுதிக்குள் வணிக நடவடிக்கைகளைத் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜேவாரில் அமைந்துள்ள நொய்டா விமான நிலையம் ஒரு ஓடுபாதை, முனையத்துடன் திறக்கப்பட்டு, சுமார் 12 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த விமான நிலையமானது நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கையை அடைந்த இந்தியாவின் முதல் விமான நிலையமாக இருக்கும்.

கிரீன்ஃபீல்ட் நொய்டா விமான நிலையத்தின் வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டிற்காக நிறுவப்பட்ட யமுனா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் பிரைவேட் லிமிடெட் என்பது சூரிச் ஏர்போர்ட் இன்டர்நேஷனல் ஏஜி-யின் 100 சதவிகித துணை நிறுவனமாகும். அதே வேளையில், நொய்டா விமான நிலையத்திற்கான சலுகை காலம் அக்டோபர் 2021 அன்று தொடங்கி 40 ஆண்டுகள் வரை பயணிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.