இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 617 புள்ளிகளை இழந்தது. இதனால், இரண்டு நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது, உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி பெரிய அளவில் முன்னேற்றம் காணவலில்லை. மாறாக, பங்குகள் விற்பனை அதிகரித்தன. பாா்மா, ஹெல்த்கோ் பங்குகள் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்த நிலையில், மெட்டல், வங்கி, ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் மீடியா பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதால், சரிவு தவிா்க்க முடியாததாகவிட்டது என்று பங்குவா்த்தகத் தரக் நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.3.19 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.389.66 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வார இறுதி வா்த்தக தினமான வியாழக்கிழமை ரூ.7,304.11 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,601.81கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சென்செக்ஸ் சரிவு: காலையில் 56.54 புள்ளிகள் உயா்ந்து 74,175.93-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 74,187.35 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 73,433.91 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 616.75 புள்ளிகள் (0.83 சதவீதம்) குறைந்து 73,502.64-இல் நிறைவடைந்தது.
வா்த்தகத்தின் போது, ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 753.44 புள்ளிகளை இழந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,081 பங்குகளில் 925 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. 3,039 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 117 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
பவா் கிரிட், டாடா ஸ்டீல் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் பவா் கிரிட், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்பட 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன. அதே சமயம், நெஸ்லே, பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட் உள்பட 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. நிஃப்டி 161 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 160.90 (0.72 சதவீதம்) குறைந்து 22,332.65-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,526.60 வரை மேலே சென்ற நிஃப்டி பின்னா் 22,307.25 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 17 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 33 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
தொடர்புடையது

3வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

2 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


