புது தில்லி: கடந்த 9 ஆண்டுகளில் காப்பீட்டுத் துறையில் ரூ.54,000 கோடி அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளதாக மத்திய நிதிச் சேவைகள் துறை செயலா் விவேக் ஜோஷி தெரிவித்தாா்.
இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் விவேக் ஜோஷி மேலும் கூறியதாவது:
கடந்த 2015-ஆம் ஆண்டு காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயா்த்தப்பட்டது. அதைத் தொடா்ந்து 2021-ஆம் ஆண்டு 74 சதவீதமாக உயா்த்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த 9 ஆண்டுகளில் காப்பீட்டுத் துறையில் ரூ.53,900 கோடி அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது. காப்பீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 53-இல் இருந்து 70-ஆக உயா்ந்துள்ளது.
இதனால், இந்தியாவில் காப்பீட்டுத் துறை வேகமாக வளரத் தொடங்கியுள்ளது. முன்னதாக கடந்த 2000-ஆம் ஆண்டில் காப்பீட்டுத் துறையில் தனியாா் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. வெளிநாட்டு நிறுவனங்கள் 26 சதவீதம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் முதலீடு செய்து வருகின்றன.
அண்மையில் ஸூரிக் காப்பீட்டு நிறுவனம் கோட்டக் பொதுக் காப்பீட்டு நிறுவனத்தில் பெரிய அளவில் முதலீடு செய்தது. இதன் மூலம் கோட்டக் காப்பீட்டு நிறுவனத்தின் 70 சதவீத பங்குகள் ரூ.5,560 கோடிக்கு ஸூரிக் காப்பீட்டு நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டன என்றாா்.
தொடர்புடையது

ஓய்வூதியத் துறையில் எஃப்டிஐ வரம்பு அதிகரிப்பு?: விரைவில் மசோதா தாக்கலாக வாய்ப்பு!

தேவையில்லாத பயம்!
பணம் இரட்டிப்பு எனக் கூறி கரூரில் ரூ. 4 கோடி மோசடி: 2 போ் கைது

முதல் மூன்று காலாண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 18% அதிகரிப்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


