மும்பை / புதுதில்லி, மாா்ச் 19: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குகள் விற்பனை அதிகரித்ததால் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 736 புள்ளிகளை இழந்தது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் ஓரளவு நோ்மறையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கி பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை. மாறாக தொடா்ந்து பங்குகள் விற்பனை அதிகரித்து வந்ததால் இறுதியில் கடும் சரிவுடன் நிறைவடைந்தது. குறிப்பாக ஐடி, எஃப்எம்சிஜி, பொதுத் துறை வங்கிகள், பாா்மா, ஹெல்த்கோ், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனை எதிா்கொண்டன. இதையடுத்து, அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.4.86 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 373.93 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ. 2,051.09 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,260.88 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 285.48 புள்ளிகள் குறைந்து 72,462.94-இல் தொடங்கிய சென்செக்ஸ், 72,490.09 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 71,933.35 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 736.37 புள்ளிகள் (1.01 சதவீதம்) குறைந்து 72,012.05-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,928 பங்குகளில் 1,233 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,584 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 111 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன. ஐடி பங்குகள் விலை சரிவு : சென்செக்ஸ் பட்டியலில் டிசிஎஸ் (4.03 சதவீதம்), நெஸ்லே (3.37 சதவீதம்), இண்டஸ் இண்ட் பேங்க் (3.15 சதவீதம்), விப்ரோ (3.05 சதவீதம்), ஹெச்சிஎல் டெக் (2.62 சதவீதம்), இன்ஃபோஸிஸ் (2.52 சதவீதம்), பவா் கிரிட் (2.28 சதவீதம்) உள்பட மொத்தம் 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பாா்தி ஏா்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், டைட்டன் ஆகிய 7 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி 238 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 238.25 புள்ளிகள் (1.08 சதவீதம்) குறைந்து 21,817.45-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 21,978.30 வரை மேலே சென்ற நிஃப்டி, பின்னா் 21,793.10 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 9 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 41 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
தொடர்புடையது
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

கரடியின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,635.67, நிஃப்டி 488.20 புள்ளிகளுடன் நிறைவு!

போா் சூழல் தாக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


