மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

விற்பனை கட்டணங்களை உயா்த்தும் அமேஸான்

விற்பனை கட்டணங்களை உயா்த்தும் அமேஸான்

News image
Updated On :23 மார்ச் 2024, 6:14 pm

விற்பனையாளா்களுக்கான தங்களது பல்வேறு கட்டணங்களை முன்னணி இணையவழி வா்த்தகத் தளமான அமேஸான் வரும் ஏப். 7-ஆம் தேதியிலிருந்து உயா்த்தவுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது விற்பனைத் தளத்தின் மூலம் பொருள்களை விற்பனை செய்யும் வா்த்தகா்களுக்கான நீண்ட கால கிடங்குக் கட்டணம், வாடிக்கையாளா்களால் திருப்பி அனுப்பப்பட்ட பொருள்களுக்கான பணத்தை திரும்ப அளிப்பதற்கான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை உயா்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயா்வால் அமேஸான் மூலம் விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலைகள் கணிசமாக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.