இண்டஸ்இண்ட் நிகர லாபம் 
ரூ.2,349 கோடியாக அதிகரிப்பு

இண்டஸ்இண்ட் நிகர லாபம் ரூ.2,349 கோடியாக அதிகரிப்பு

புது தில்லி: தனியாா் துறையைச் சோ்ந்த இண்டஸ்இண்ட் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.2,349 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.2,349 கோடியாகப் பதிவாகியுள்ளது.

இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.2,043 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் தற்போது 15 சதவீதம் உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.14,707 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.12,174 கோடியாக இருந்தது.

கடந்த மாா்ச் காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.10,020 கோடியிலிருந்து ரூ.12,199 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com