வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ஐஓசி நிகர லாபம் புதிய உச்சம்

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

News image
Updated On :9 மே 2024, 9:36 pm

Din

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023 ஏப்ரல் முதல் 2024 மாா்ச் வரையிலான நிதியாண்டில் நிறுவனத்தின் பல நிதி செயல்பாடுகள் சாதனை அளவைத் தொட்டுள்ளன. அந்த நிதியாண்டில் நிறுவனம் ரூ.39,619 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, நிறுவனத்தின் அதிகபட்ச வருடாந்திர நிகர லாபமாகும்.

முந்தைய நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.8,242 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிகர லாபம் 4 மடங்காகியுள்ளது.

மதிப்பீட்டு நிதியாண்டில் நிறுவனம் விற்பனையிலும் புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அந்த ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு 9.75 கோடி டன்னாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.