சென்செக்ஸ் 1,062 புள்ளிகள் சரிவு : ரூ.7 லட்சம் கோடி முதலீடு இழப்பு!

சென்செக்ஸ் சரிவு: ரூ.7 லட்சம் கோடி முதலீடு பாதிப்பு
மாதிரி படம்
மாதிரி படம்

இந்த வாரத்தில் தொடர் சரிவைச் சந்தித்துவருகிற பங்குச் சந்தை வியாழக்கிழமையும் சரிவைச் சந்தித்துள்ளது.

பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவடைந்தது. நிப்டி 22 ஆயிரம் புள்ளிகளுக்கு குறைவாக பதிவாகியது.

முதன்மை நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியான நிலையில் அதிக பங்கு விற்பனைக்கான கோரிக்கை வரவே மளமளவென பங்குகள் சரிவடைந்துள்ளன.

சென்செக்ஸ் 1,062 புள்ளிகள் சரிந்து 72,404 என்கிற நிலையிலும் நிப்டி 345 புள்ளிகள் சரிந்து 21,957 என்கிற நிலையிலும் முடிவடைந்தது.

பங்குச் சந்தையில் ஏற்பட்ட குழப்பத்தினால் முதலீட்டாளர்கள் ரூ.7 லட்சம் கோடி இழப்புக்கு உள்ளாகினர்.

நிப்டி பொது துறை நிறுவனங்கள் பட்டியலில் (பிஎஸ்இ) உள்ள பங்குகள் 3.41 சதவிகிதம் சரிந்த நிலையில் நிப்டி ஆயில் மற்றும் கேஸ் பட்டியலில் உள்ள பங்குகள் முறையே 3.15 மற்றும் 2.97 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது.

நிப்டி என்பிரா, எஃப்எம்சிஜி மற்றும் நிப்டி மெட்டல் ஆகியவை 2.5 சதவிகிதத்திற்கு அதிகமாக சரிந்தது. நிப்டி ஆட்டோ மட்டுமே நேர்மறையாக 0.78 சதவிகித உயர்வில் முடிவடைந்தது.

தேர்தல் முடிவுகள் குறித்த நிச்சயமின்மையால் பங்குச் சந்தை தொடர்ச்சியாக அழுத்தத்தைச் சந்தித்து வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com