செலவுகளை அதிகரித்துள்ளதா யுபிஐ? ஆய்வு சொல்வது இதுதான்!

யுபிஐ மூலம் அதிகரிக்கும் செலவுகள்: ஆய்வு அலசல்
யுபிஐ (மாதிரி படம்)
யுபிஐ (மாதிரி படம்)ஐஏஎன்எஸ்

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியர்கள் யுபிஐ மூலமாக அதிகம் செலவளிப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

நாள்தோறும் மேற்கொள்கிற பண பரிவர்த்தனைகள் தாண்டி வீட்டு உபயோக பொருள்கள், தொழில்நுட்ப சாதனங்கள், ஆடை அலங்கார பொருள்கள் உள்ளிட்டவற்றை மக்கள் யுபிஐ மூலமாக வாங்குகின்றனர்.

ஐஐடி தில்லி மேற்கொண்ட இந்த ஆய்வில், யுபிஐ மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வளர்ச்சிக்கு பிறகு ஏறத்தாழ 74 சதவிகிதம் மக்கள், தேவைக்கு அதிகமாக செலவிடுவதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து, “பணத்தைக் காட்டிலும் கையாள எளிதாக உள்ள இந்த யுபிஐ வசதி, செலவளிப்பது குறித்த குறைவான அறிதலை ஏற்படுத்துகிறது. பணம் என்கிற உடைமை கையில் இல்லாததால் செலவுகளை கண்காணிக்க இயல்வதில்லை” என சந்தை வல்லுநர் பிரபு ராம் தெரிவித்துள்ளார்.

என்பிசிஐ, ஏப்ரல் மாதத்தில் யுபிஐ மூலம் 1,330 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 50 சதவிகிதம் அதிகமான எண்ணிக்கை இது. மேலும் சராசரியாக ஒரு பரிவர்த்தைக்கான செலவு (ஏடிஎஸ்) ரூ.1,648-ல் இருந்து ரூ.1,515 ஆக குறைந்துள்ளது.

யுபிஐ வந்த பிறகு கையில் காசு இருப்பதில்லை என்கிற நிலையைத் தாண்டி வங்கிக் கணக்கிலும் காசு இருக்க நாம் விடுவதில்லை என இந்த ஆய்வு சொல்லாமல் சொல்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com