240 மையங்களில் டியூசன் வகுப்புகள் தொடக்கம்: மீளுமா பைஜுஸ்?
பைஜுஸ் 240 மையங்களில் புதிய வகுப்புகள்: மீளும் நம்பிக்கை


பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பைஜுஸ் தனியார் கல்வி பயிற்சி மையம், அதன் 240 மையங்களில் 2024-25 கல்வியாண்டுக்கான டியூஷன் வகுப்புகளை தொடங்குவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பறை முறையில் டியூஷன் பயிற்சி அளித்து வருகிறது பைஜுஸ்.
மேலும் இந்த ஆண்டு வருடாந்திர கல்வி கட்டணத்தை ரூ.36 ஆயிரமாக குறைத்துள்ளதாகவும் பைஜுஸ் தெரிவித்துள்ளது.
பைஜுஸ் அதன் ஊழியர்களுக்கு பிப்ரவரி முதல் சம்பளம் வழங்காததாக தெரிவிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்போது ஏப்ரல் மாதத்துக்கான முழுமையான சம்பளத்தை ஊழியர்களுக்கு நிறுவனம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிப். மற்றும் மார்ச் மாத சம்பளமும் விற்பனை பிரிவு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் உள்பட சம்பளம் நிலுவையில் உள்ளது.
296 மையங்களில் 240 இடங்களில் பயிற்சி வகுப்புகளை மீண்டும் தொடங்கும் பைஜுஸ் நிதி நெருக்கடிகளில் இருந்து மீள முயற்சித்து வருகிறது.
ஆகாஷின் 300 மையங்கள் சேர்த்தால் இந்தியாவில் மிக பெரியளவில் தொடர் கல்வி மையங்களை வைத்துள்ள நிறுவனமாக பைஜுஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...