இந்திய பங்குச் சந்தைகள் வரும் வாரம் எப்படி இருக்கும்?

இந்திய பங்குச் சந்தை குறியீடு, வரும் வாரத்தில், படிப்படியாக ஏற்றம் காணும் என சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

புதுதில்லி: இந்திய பங்குச் சந்தை குறியீடு, வரும் வாரத்தில், படிப்படியாக ஏற்றம் காணும் என சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் வலுவான செயல்திறன் அடிப்படையில் பங்குச் சந்தை முடிவடைந்த நிலையில், இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் வரும் வாரத்தில் படிப்படியாக மேல்நோக்கி செல்லும் என்றும் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் கடந்த வெள்ளிக்கிழமை, முறையே 75,410 மற்றும் 22,957 புள்ளிகளில் முடிவடைந்தது. அதே வேளையில், மிட்கேப் பங்குகள் 1 சதவிகிதம் அதிகரித்ததும், ஸ்மால் கேப் பங்குகள் இறக்கமடைந்தும் முடிவடைந்தன.

இதனிடையே, முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை (மே 27) முதல் வரும் வாரத்தில் நடைபெறவுள்ள மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் வரை, உலகளாவிய சந்தைக் குறிப்புகள் மற்றும் வருவாய் குறித்த கட்டமைப்பு போன்றவற்றை தொடர்ந்து கவனித்து வருவார்கள் என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில், போக்குகள் சற்று கலவையாக இருப்பினும், நாஸ்டாக் மற்றும் S&P 500ஐ உள்ளடக்கிய பல்வேறு துறைகள், சற்று பின்னடைவை சந்தித்தாலும், அதன் பங்குகள் அவ்வப்போது உயர்ந்தே முடிந்தது. அனைத்து முக்கிய துறை சார்ந்த பங்குகளும், பங்குச் சந்தை பேரணிக்கு பங்களித்தாலும், வங்கி மற்றும் ஐடி துறைகளின் ஆதிக்கம் சற்று மேலோங்கியே காணப்பட்டது.

கடந்த மூன்று அமர்வுகளாக, அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளின் நிகர விற்பனையாளர்களாக உள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நிகர வாங்குபவர்களாக மாறியுள்ளனர். கடந்த இரண்டு வாரத்தில் சென்செக்ஸ் 3,500 புள்ளிகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ.-யின் சந்தை மூலதனம் 2030ல் 10 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே, 2027ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு உதவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற போது 24,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ் குறியீடு தற்போது 75,300 புள்ளிகளைக் கடந்துள்ளது என்று அகில இந்திய தொழில்துறை சங்கத்தின் தலைவரும், எம்விஐஆர்டிசி உலக வர்த்தக மையம் தலைவருமான விஜய் களந்திரி தெரிவித்தார்.

இது குறித்து 5paisa.com இன் ருச்சித் ஜெயின் கருத்து தெரிவிக்கையில், வர்த்தகர்கள் எந்தவொரு சரிவிலும் சரியான பங்குகளை வாங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக, மக்களவைத் தேர்தல் முடிவடையும் தருவாயில் இருப்பதால், அடுத்த வாரம் முதல் சந்தைப் படிப்படியாக ஏற்ற, இறக்கங்களைக் காணும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் சில்லறை ஆராய்ச்சி தலைவர் சித்தார்த்தா கெம்கா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com