தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்
தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 160, வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.3.50 அதிகரிப்பு.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.53,920-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை ரூ.53,240-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வார தொடக்க நாளான நேற்று ஒரு சவரன் ரூ.53,760-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 6,740-க்கும், ஒரு சவரன் ரூ. 53,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.101.50-க்கும், ஒரு கிலோ ரூ. 1,01,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...