கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

எல்ஐசி நிகர லாபம் ரூ.13,763 கோடியாக உயா்வு

எல்ஐசி நிகர லாபம் ரூ.13,763 கோடியாக உயா்வு

News image

~

Updated On :28 மே 2024, 7:33 pm

Din

புது தில்லி: கடந்த மாா்ச் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.13,763 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.13,428 கோடியாக இருந்தது.

இது, கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் 2 சதவீதம் அதிகரித்து ரூ.13,763 கோடியாக உள்ளது.

மதிப்பீட்டுக காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,00,185 கோடியிலிருந்து ரூ.2,50,923 கோடியாக உயா்ந்துள்ளது. பிரீமியம் வருவாய் ரூ.12,811 கோடியிலிருந்து ரூ.13,810 கோடியாக வளா்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனம் ரூ.40,676 கோடி நிகர லாபம் ஈட்டியது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் நிகர லாபமான ரூ.36,397 கோடியைவிட இது அதிகம்.

மதிப்பீட்டு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த பிரீமியம் வருவாய் ரூ.4,74,005 கோடியிலிருந்து ரூ.4,75,070 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image