சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 900 புள்ளிகள் வீழ்ச்சி!
வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (அக். 4) பங்குச் சந்தை சரிவுடன் முடிந்தது.


வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (அக். 4) பங்குச் சந்தை சரிவுடன் முடிந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் இன்று காலை 79,713.14 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில், 941.88 புள்ளிகள் குறைந்து 78,782.24 புள்ளிகளில் நிறைவுற்றது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 309 புள்ளிகள் சரிந்து 23,995.35 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் முடிவுற்றது.
எம்&எம், டெக் மஹிந்திரா, சிப்லா, எஸ்பிஐ, டாக்டர்ரெட்டி , ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, அதானி போர்ட்ஸ், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.
இதனால் சுமார் ரூ. 6 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளிடையே நடக்கும் போர், அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்குவதுதான் பங்குச்சந்தை சரிவுக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...