சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி!
பங்குச் சந்தை இன்றும் (நவ. 5) சரிவுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.


பங்குச் சந்தை இன்றும் (நவ. 5) சரிவுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் இன்று காலை
78,542.16 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 11.45 மணி நிலவரப்படி, செக்செக்ஸ் 941.88 புள்ளிகள் குறைந்து 78,362.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 126.35 புள்ளிகள் சரிந்து 23,869.00 புள்ளிகளில் உள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி, ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா, ஹெச்டிஎப்சி லைஃப், ஸ்ரீராம் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.
ஆட்டோமொபைல், வங்கி, உலோகம், பொதுத்துறை வங்கிகள் தவிர மற்ற அனைத்து துறைகளும் சரிவை சந்தித்து வருகின்றன.
இன்று நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலியாக பங்குச்சந்தை சரிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...