மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சரிவில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் வீழ்ச்சி!

தொடர்ந்து இரண்டு நாள்கள் ஏற்றத்திற்குப் பின் பங்குச்சந்தை இன்று(நவ. 7) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

News image
Sensex falls
Updated On :7 நவம்பர் 2024, 7:16 am

DIN

தொடர்ந்து இரண்டு நாள்கள் ஏற்றத்திற்குப் பின் பங்குச்சந்தை இன்று(நவ. 7) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் இன்று காலை
80,563.42 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 12.37 மணி நிலவரப்படி, செக்செக்ஸ் 756.12  புள்ளிகள் குறைந்து 79,622.01 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 261.20 புள்ளிகள் சரிந்து 24,222.85 புள்ளிகளில் உள்ளது.

ஊடகத் துறையைத் தவிர ஆட்டோமொபைல், வங்கி, உலோகம், ஐடி என மற்ற அனைத்துத் துறைகளும் சரிவை சந்தித்து வருகின்றன.

நிஃப்டி 50 -ல் அப்போலோ மருத்துவமனை, டாடா ஸ்டீல், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தையும்

ஹிண்டால்கோ, அதானி என்டர்பிரைசஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவையும் சந்தித்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எதிரொலியாக நேற்று உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தைகள் இன்று இறக்கம் கண்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.