ரஷியாவின் தங்க கையிருப்பு வரலாறு காணாத உச்சம்!
உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ரஷியாவின் தங்கத்தின் இருப்பு மதிப்பானது அக்டோபர் மாதம் முதல் முறையாக 200 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.


மாஸ்கோ: உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தங்கத்தின் இருப்பு மதிப்பானது அக்டோபர் மாதம் முதல் முறையாக 200 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டி சாதனை படைத்துள்ளது ரஷியா. அதே சமயம் தங்கத்தின் சர்வதேச கையிருப்பு 32.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக ரஷிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும் ஒரு நாட்டின் தங்க கையிருப்பே அந்த நாணயத்தின் மதிப்பை நிர்ணயிக்கின்றது. இதனால் பல்வேறு நாடுகளும் தங்கத்தைச் சேமித்து் வருகின்றன.
இந்த நிலையில் ரஷியாவின் தங்க இருப்பு கடந்த மாதம் கிட்டத்தட்ட 4 சதவிகிதம் அதிகரித்தும் அதன் டாலர் கையிருப்பு 207.7 பில்லியனை எட்டியது. அதே வேளையில் அக்டோபரில் தங்கத்தின் விலையானது சுமார் 4 சதவிகிதம் உயர்ந்து அவுன்ஸூக்கு 2,800 டாலர் என்ற சாதனை உச்சத்தை எட்டியது.
நவம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் சர்வதேச கையிருப்பு 631.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இது முந்தைய காலத்தை விட 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் குறைவு என்று ரஷிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...