/

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

News image
கோப்புப்படம்- Din
Updated On :13 நவம்பர் 2024, 5:19 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்றும்(நவ. 13) அதிரடியாக குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை முதல் தொடர்ந்து குறைந்து வருகின்றது.

நேற்று(செவ்வாய்க்கிழமை) தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,080 குறைந்து ரூ. 56,680-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 7,045-க்கும் ஒரு சவரன் ரூ. 56,360-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல் சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கமும் குறைந்து ஒரு கிராம் ரூ. 7,550-க்கும் ஒரு சவரன் ரூ.  60,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதனிடையே, வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ. 101-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.