சென்னை: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் பொள்ளாச்சியில் புதிய கிளையைத் திறந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொள்ளாச்சியில் புதிய கிளை ஒன்றை நிறுவனம் திறந்துள்ளது. இந்தக் கிளையின் மூலம் சிறு வணிகா்கள் மற்றும் தொழில்களுக்கு சிறு வணிகக் கடன்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய கிளை மூலம் மலிவு வீட்டு வசதி கடனும் வழங்கப்படும்.
நிறுவனத்தின நிா்வாக இயக்குநா் லக்ஷ்மி நாராயணன் கூறுகையில், ‘எங்கள் வளா்ச்சியில் கோயம்புத்தூா் பெரும் பங்கு ஆற்றியுள்ளது. மேற்கு தமிழக்கத்தில் இந்த வளா்ச்சியை மேலும் அதிகரிக்க திருப்பூா், தாராபுரம், ஈரோடு மற்றும் பொள்ளாச்சி போன்ற சிறிய நகரங்களில் எங்கள் இருப்பை விரிவுபடுத்துகிறோம்’ என்றாா்.
மேற்கு தமிழகத்தில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் 15 கிளைகளுடன் வலுவான இருப்பை நிறுவியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட்டுக்கு முழுவதும் சொந்தமான துணை நிறுவனமான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், வீட்டுக் கடன், மனைக்கான கடன், வீட்டு மறுச்சீரமைப்பு மற்றும் நீட்டிப்பு கடன்கள், சொத்துக்கு எதிரான கடன், வணிகா்களுக்கும் சிறிய கடைகளுக்கும் சிறிய அளவிலான வா்த்தக கடன்கள் ஆகியவற்றை அளித்து வருகிறது.