எரிவாயு விநியோகத்தில் வருவாய் அதிகரிப்பு, பெட்ரோகெமிக்கல் வா்த்தகத்தில் அதிக லாபம் ஆகிய காரணங்களால் பொதுத் துறையைச் சோ்ந்த கெயில் (இந்தியா) லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 10 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் ரூ. 2,689.67 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 2,442.18 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.33,981.33 கோடியாக உள்ளது. எனினும், சந்தைப்படுத்தல் மூலம் கிடைத்த வருவாய் 27 சதவீதம் குறைந்து ரூ.1,253.64 கோடியாக உள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








