சரிவிலிருந்து மீண்ட அதானி பங்குகள்!
அதானி குழுமத்தின் பங்குகள் இன்று முந்தைய நாள் சரிவிலிருந்து மீண்டது.

அதானி

அதானி
புதுதில்லி: அதானி குழுமத்தின் பங்குகள், முந்தைய நாளில் சரிவிலிருந்து இன்று மீண்டது.
அதே வேளையில், இந்திய பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று 2.54 சதவிகிதம் உயர்ந்து 79,117.11 புள்ளிகளில் நிலைபெற்றது.
அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 3.50 சதவிகிதமும், ஏசிசி 3.17 பங்குகள் சதவிகிதமும், குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் சதவிகிதமும், அதானி போர்ட்ஸ் பங்குகள் 2 சதவிகிதமும், அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 1.18 சதவிகிதமும், என்டிடிவி பங்குகள் 0.65 சதவிகிதமும் உயர்ந்தது.
இதற்கு மாறாக, அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 8.20 சதவிகிதமும், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 6.92 சதவிகிதமும், அதானி பவர் 3.23 சதவிகிதமும், அதானி வில்மர் 0.73 சதவிகிதம் சரிந்தது.
இதையும் படிக்க: தென்காசியில் பள்ளிகளுக்கு நாளை(நவ.23) விடுமுறை!
சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டிய நிலையில், இன்றைய காலை நேர வர்த்தகத்தில், அதானி குழுமத்தின் பெரும்பாலான பங்குகள் உயர்ந்தது.
அதானி குழும நிறுவன பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் (வியாழக்கிழமை) கடுமையாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...